தேங்கைபட்டனம் மீன்பிடி துறைமுகத்துக்கு ஜனவரி இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் - துறைமுக நடவடிக்கை குழு தகவல்.
Source : http://www.dailythanthi.com/article.asp?NewsID=457200&disdate=12/18/2008&advt=2
Name :
M.N. HAMEED
Subject:
பஹ்ரைனில் ஒர் பட்டணம் விழா
Date:
Dec 13 2008
Time:
01:49:43 am
News :
அஸ்ஸலாமு அலைக்கும்
பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.
பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் 26 வது ஆண்டு விழா 9.12.2008 செவ்வாய்க்கிழமை ஹூரா அனாரத் பேன்கெட் ஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா.
மாலை 7 மணிக்கு செய்யது அப்துல் ரஹ்மான் கோயா தங்ஙள் கிராஅத் ஒத,
M. N. முஹம்மது ஜாஸிம் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை ஓத, மௌலவி சரபுதீன் பைசி அதன் விளக்கவுரையினை ஒத, விழா இனிதே ஆரம்பமானது.
சரபுதீன் பைசி வரவேற்புரையாற்றினார். பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி முஹம்மது யூனுஸ் தலமையுரையாற்றினார். செய்யது பக்ருதீன் கோயா தங்ஙள் தேங்காய்பட்டணத்தின் பழமை சிறப்பினையும், பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் பணிகளையும் எடுத்துக்கூறி அதன் ஆரம்ப கால வரலாற்றையும், நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார்.
பிரபல வைர வியாபாரியும், பாரதி அசோசியேசன் தலைவரும், சமுதாய தலைவருமான தலமை விருந்தினருமான் முஹம்மது ஹுசைன் மாலிம் விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி, சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் சிறப்புரையாற்றினார்.
கௌரவ விருந்தினராக கலந்துக்கொண்ட இந்தியன் ஸ்கூல் நிர்வாகக் குழுவின் புதிய சிறப்புத்தலைவர் DR. வெங்கடாசலம் மலர்க்குழுவினர்க்கு சான்றிதழ்களை வழங்கி, தேங்காய்பட்டணம் பற்றிய டாக்குமெண்டரி C.D.வெளியிட்டு பேசினார். தம்மை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றியினை தெரிவித்ததோடு தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்திற்கு தன் முழு ஆதாரவினையும் தெரிவித்தார்.
தொடர்ந்து தம்மாம் காயல் வெல்பேர் அசோசியேசன் தலைவர் DR. இத்ரீஸ், பாரதி அசோசியேசன் செயலாளர் அஹ்மது கபீர், பாரதி அசோசியேசன் இலக்கிய செயலாளர் கவிஞர் அப்துல் கையூம், B.F.C. தலைவர் காலித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.
ஜமாஅத் பொருளாளர் முஹம்மது றாபி ந்ன்றி கூற விருந்துடன் விழா இரவு 9.30 மணிக்கு இனிதே முடிந்தது. விழா நிகழ்ச்சியினை சரபுதீன் பைசி தொகுத்தளித்தார்.
இவ்விழாவில் ஜமாஅத் உறுப்பினர்களும், அவர்தம் குடும்பங்களும், அழைக்கப்பட்ட விருந்தினருமாக சுமார் 200 பேர் கலந்துக் கொண்டனர்.
விழா மலர் / C.D வேண்டுவோர் ஜமாஅத் பொருளாளர் முஹமமது றாபி (TEL: 973 39244347) யினை தொடர்பு கொள்ளவும்.
செய்தி: எம். என். ஹமீது (TEL: 973 39726257)
Name :
கவிஞர் உ. தாஹா ஹுசைன்
Subject:
தேங்காய்ப்பட்டணம் செல்வோமா?
Date:
Dec 03 2008
Time:
01:06:33 am
News :
தேங்காய்ப்பட்டணம் செல்வோமா?
தென் தமிழ் நாட்டில் தீனின் தென்றல்
வீசிய நல்லூரே! அது
மாலிக் தீனார் மகிமையைப் போற்றிப்
பேசிய தீனூரே!
நீங்காப் பண்பின் நெறியினைப் போற்றும்
தேங்காய்ப்பட்டணமே! அங்கே
தீனின் வாசம் தினமும் வீசும்
தீன்கா பட்டணமே!
பண்டைப்புகழும் பாரம்பரியமும்
மிக்கது எம்மூரே! எம்
முந்தையர் வாழ்ந்த நெறியினைக் காட்டும்
நீங்காப் புகழூரே!
அ ரபிக் கடல் ஆறு ஓரம்
அமைந்த அழகூரே! அங்கே
ஆ றும் கடலும் ஆரத்தழுவும்
அழகைக் காண்போமா?
கொஞ்சு தமிழ் புலவர் குஞ்சு மூசா
வாழ்ந்ததும் எம்மூரே! அவர்
பாடிய பாடல்கள் பைந்தமிழ் பாடல்கள் தவழ்ந்த்தும் எம்மூரே!
பாலகவியாம் பக்கீர் ஸாஹிப்
பாடிய பாடல்களோ! ஆஹா
இன்பத்தேனாய் இனிக்குது இன்றும்
இதயம் களிப்போமா?
தெக்கேபட்டணம், தேங்காய்ப்பட்டணம்,
குழந்தை நகர் என்றும்- தேங்கை
தென்னைப்பட்டணம், தர்மபட்டணம்
என பல பெயருண்டு!
எழில்மிகு ஊரின் அழகினைக் காண
விழிகள் போதாது – அதன்
உயர்வினைப்பாட சிறப்பினைப்போற்ற
மொழிகள் போதாது!
ஓங்கும் தென்னை ஒங்கிவளரும்
தேங்கை செல்வோமா? அங்கே
பாங்குடண் இதயம் களித்திட நாமும்
பட்டணம் செல்வோமா?
தேங்காய்ப்பட்டணம் செல்வோமா?